Home> Tamil Nadu
Advertisement

2020-21 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27, 28-ல் நடைபெறும்!

நடப்பாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27, 28 ஆம் தேதியில் நடைபெறும் என உத்தேச பட்டியல் வெளியீடு!!

2020-21 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27, 28-ல் நடைபெறும்!

நடப்பாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27, 28 ஆம் தேதியில் நடைபெறும் என உத்தேச பட்டியல் வெளியீடு!!

சென்னை: நடப்பாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27, 28-ல் நடைபெறும் என உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுவுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. முதுநிலை ஆசிரியர் பணி தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 1 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணி தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 9 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (Central Teacher Eligibility Test - CTET) என்பது இந்திய அரசின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்தும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு ஆகும். இத்தேர்வு கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப் படுகிறது.

2019 ஆம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு - சிடெட் (CTET) டிசம்பர் 8 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வினை 24,05,145 பேர் எழுதினர். இந்நிலையில், 2020-21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், முதுநிலை ஆசிரியர் பணி தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 1 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணி தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 9 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

 

Read More