Home> Tamil Nadu
Advertisement

டாஸ்மாக் திறக்கும் நேரம் மாற்றம்? - அமைச்சர் முத்துசாமி சொன்னது இதுதான்!

மதுக்கடைகளில் 90 ML பேக்கில் மதுவிற்பனை செய்வது, மதுகடை திறக்கும் நேரம் மாற்றம் செய்வது குறித்து சிறிது  கால அவகாசம் வேண்டும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

டாஸ்மாக் திறக்கும் நேரம் மாற்றம்? - அமைச்சர் முத்துசாமி சொன்னது இதுதான்!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள ஆண்டிபாளையம் சலசலப்பு பகுதியில் கீழ்பவானி வாய்க்காலின் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் குறித்து 17ஆவது மைலில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால்சுன்கரா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுதுறை, வீட்டுவசதிதுறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று ஆய்வு (ஆக. 2) செய்தார்.

கீழ்பவானி வாய்க்கால்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி,"வரும் ஆக. 15ஆம் தேதி தண்ணீர் திறக்க ஆயத்த பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் கடந்த சில மாதங்களாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க பணிகள் முடியும் நிலையில் ஓரிரு இடங்களில் வேலைகள் இன்னும் முடியவில்லை, தண்ணீர் திறக்க முயற்சிக்கிறோம் 

கீழ்பவானி வாய்க்காலில் இரண்டு இடங்களில் வேலை மெதுவாக நடைபெற்று வருகிறது. அப்பணிகளை வேகப்படுத்தி அதிக ஆட்களை பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் பல இடங்களில் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. 

மேலும் படிக்க | எம்.ஜி.ஆரின் சிலையை பார்த்தே நடுங்குபவர்கள் திமுகவினர்-ஜெயகுமார்

கீழ்பவானி வாய்க்கால் பணிகள் ஆகஸ்ட்10, 11ஆம் தேதிகளில் பணிகளை விரைந்து முடிக்க பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மதுக்கடைகளில் 90 ML பேக்கில் மதுவிற்பனை செய்வது மதுகடை நேரம் மாற்றம் செய்வது குறித்து கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்" என கூறினார்.

கடும் நடவடிக்கை

சமீபத்தில், டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ. 10 அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்தபோது, டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் நிர்ணயம் செய்யபட்ட விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும் அரசுக்கும் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கூடாது என்றும் அமைச்சர் முத்துசாமி முன்னதாக அறிவுறுத்தியிருந்தார். 

சமூக வலைதளங்களில் தவறான முறையில் பதிவு செய்ய கூடாது என்றும் இனி ரூ. 10 கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் முன்னர் தெரிவித்தார். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, டாஸ்மாக் விற்பனையை காலை 7 மணி முதல் தொடங்க அதிக கோரிக்கைகள் எழுந்து வருகின்றன என்றும் அவர் முன்னர் கூறியிருந்தார். 

செந்தில் பாலாஜி இருந்தபோது வந்த புகார்

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோதே, பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பதாக பேச்சுகள் வந்தன. தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததை அடுத்தும், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையிலும், அவரின் இலாக்காவை வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்த முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. 

மேலும், செந்தில் பாலாஜியின் மின்சாரத்துறை இலாக்கா நிதி துறை அமைச்சரான தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. தற்போது புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வரும் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லா அமைச்சராக அமைச்சரவையில் தொடர்வது நினைவுக்கூரத்தக்கது.

மேலும் படிக்க | “கண்ட கழிசடையும் பேசினா நல்லா இருக்காது”: சீமானை விளாசிய ராஜ்கிரண்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More