Home> Tamil Nadu
Advertisement

TANCET தேர்விற்கு வரும் மே 8-ஆம் நாள் முதல் விண்ணப்பிக்கலாம்...

MBA, MCA, ME, M.Tech, M.Arch ஆகிய பாடப்பிரிவில் சேர்வதற்கான TANCET தேர்விற்கு 8-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொதுநுழைவு தேர்வு செயலர் தெரிவித்துள்ளார்!

TANCET தேர்விற்கு வரும் மே 8-ஆம் நாள் முதல் விண்ணப்பிக்கலாம்...
MBA, MCA, ME, M.Tech, M.Arch ஆகிய பாடப்பிரிவில் சேர்வதற்கான TANCET தேர்விற்கு 8-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொதுநுழைவு தேர்வு செயலர் தெரிவித்துள்ளார்!
 
தமிழ்நாட்டிலுள்ள அரசு/ அரசு உதவிபெறும்/ அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள்/ அண்ணாமலை பல்கலைகழகம்/ சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் 2019-20 ஆம் கல்வியாண்டில் முதுநிலைப் படிப்புகளில் சேருவதற்கான TANCET எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்விற்கு வரும் 8-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொதுநுழைவு தேர்வு செயலர் ஈஸ்வர்குமார் தெரிவித்துள்ளார்
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2019-க்கான TANCET தேர்வை சென்னை அண்ணாப் பல்கலைக் கழகம் நடத்தும் என தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நுழைவுத் தேர்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள், அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் மண்டல கல்லூிகள், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள MBA, MCA, ME, M.Tech, M.Arch ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேரலாம்.
 
இதற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாயும், SC,  ST பிரிவினருக்கு 250 ரூபாயும் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். இந்த தேர்வினை எழுதுவதற்கு மே 8-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை ஆன்லைன் (https://www.annauniv.edu/tancet2019) முலம் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
நுழைவு தேர்வு நடைபெறும் நாள்...
  • MCA - 22.06.2019 காலை 10 மணி முதல் 12 மணி வரை
  • MBA - 22.06.2019 பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை
  • ME, M.Tech, M.Arch, M.Plan - 23.06.2019 காலை 10 மணி முதல் 12 மணி வரை
Read More