Home> Tamil Nadu
Advertisement

'மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள்' - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி புகழாரம்!

மொழிக்காக எப்போதும் முதலாவதாக வருபவர்கள் தமிழர்கள் என பெருமிதம் தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, தற்போதைய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காடுவது குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என குறிப்பிட்டார்.  

'மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள்' - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி புகழாரம்!

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒன்பது மாடி நிர்வாக பிரிவு கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா விழாவில் பங்கேற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழ்நாட்டிற்கு வந்ததில் பெருமை கொள்கிறேன். தலைமை நீதிபதி ரமணா, நீதித்துறையில் நாட்டு மக்களின் நம்பிக்கையாக திகழ்கிறார். சட்டத்தின் குரலாக மட்டும் அல்லாமல் மக்களின் குரலாகவும் விளங்குகிறார். சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும். தமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்'' என தெரிவித்தார். 

மேலும் படிக்க | பணம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டம், இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம்: நீதிபதி வருத்தம்

fallbacks

இதைத்தொடர்ந்து உரையாற்றிய தலைமை நீதிபதி ரமணா, ''முதல் முறையாக சென்னை வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. பொதுமக்கள் நீதிமன்றம் தங்கள் உரிமையை பாதுகாக்கும் என நம்புகின்றனர். அதேபோல் சென்னை வழக்கறிஞர்கள் நீதித்துறையை வலுப்படுத்யும் பணிகளில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். 

இந்திய அரசியல் சாசன வரைவு பணியில் எராளமான தமிழர்களின் பங்களிப்பு உள்ளது. தலைமை நீதிபதியாக அரசியல் சாசன கடமையை நிறைவேற்றுவது என்பது சுமையான பணி தான் என்ற போதும், அதை சிறப்பாக செய்து வருகிறேன். 

நாட்டில் பெரும்பாலானோர் உடனடி காப்பி, உடனடி நூடுல்ஸ் போல உடனடி நீதியையும் எதிர்பார்க்கின்றனர். அப்படி செய்தால் அது நீதியை கொன்றுவிடும். ஆக்கப்பூர்வமான தீர்வுகள் காணும் போது நீதிபதிகள் கண்மூடி சட்டத்தை மட்டும் சார்ந்திருக்க முடியாது.  சமூக உண்மையையும்  உணர வேண்டும். நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை வழக்காடிகள் புரிந்துகொள்ளும் வகையில் இருக்க வேண்டும். திருமணத்தில் ஓதப்படும் மந்திரங்களை போல விசாரணை என்பது புரிந்து கொள்ள முடியாததாக இருக்க கூடாது.

fallbacks

நீதிமன்ற விசாரணைகளில் மாநில மொழிகளை பயன்படுத்துவதில் சில சிக்கல் உள்ள போதும், தற்போதைய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காடுவது குறித்து விரைவில் தீர்வு காணப்படும். தமிழர்கள் மொழி அடையாளம் மிக்கவர்கள். பெருமை மிக்க தமிழர்கள், மொழிக்காக எப்போதும் முதலாவதாக வருவார்கள். வழக்கறிஞர்களின் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்

'ஆணும் பெண்ணும் ஓரென கொள்வதால் அறிவில் ஓங்கி தழைக்கும்' என குறிப்பிட்டுள்ளார் பாரதியார். எனவே, நீதிபதி பதவிக்கு வர ஆண் - பெண், இடம், இனம், மொழி உள்ளிட்ட எவையும் தடையாக இருக்க கூடாது'' என தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.

மேலும் படிக்க | இந்திய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் நீதிபதி என்.வி.ரமணா

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More