Home> Tamil Nadu
Advertisement

போக்சோ வழக்கில் அவசரப்படாதீர்கள் - டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தல்

திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

 போக்சோ வழக்கில் அவசரப்படாதீர்கள் - டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தல்

பாலியல் வெறியில் பலர் சிறுமிகள் மீது வன்கொடுமையை நிகழ்த்துகிறார்கள். அந்த வன்கொடுமை  ‘காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது’ என்ற வயதில் இருப்பவர்களும் நிகழ்த்துவது உண்டு. சிறு வயதினர் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமை குறையும் என்று பலர் எதிர்பார்த்திருக்க நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அப்படி சிறு வயதினர் மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்துபவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள்.  இந்தச் சூழலில் போக்சோவில் கைது செய்யும்போது அவசரம் வேண்டாம் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு காவல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழு போக்சோ சட்டத்தினை ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

இதன்படி திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக சம்மன் அனுப்பி எதிரி மற்றும் எதிர் மனுதாரர்களை விசாரணை செய்யலாம்.

குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரத்தை வழக்கு கோப்பில் பதிவு செய்து, அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும். குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்ய வேண்டும். 

முக்கிய வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் வழக்கு கோப்பினை தீவிரமாக ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ’நாளைய முதல்வர் தளபதி’ தேனியில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

மேலும் படிக்க | எடப்பாடி பழனிசாமி தனிமைப்படுத்தப்படுவார்: வைத்தியலிங்கம் சொல்லும் கணக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More