Home> Tamil Nadu
Advertisement

அக்னிபாத் திட்டம் - தமிழக காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது?

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் 27ஆம் தேதி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் என நடத்தப்படுமென்று அக்கட்சியின் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி கூறியிருக்கிறார்.  

அக்னிபாத் திட்டம் - தமிழக காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது?

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சாமானியர்கள் முதல் தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள்வரை பலரும் இத்திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர்.

ஆனால் திட்டத்தை திரும்பப் பெறுவதற்காக சாத்தியமே இல்லை என்கிறது மத்திய அரசு. எனவே நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்துவருகின்றன. அந்தவகையில் தமிழக காங்கிரஸ் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

fallbacks

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டிருக்கும அறிவிப்பில்,  “இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தராத, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டுமென்று தலைவர் ராகுல்காந்தியும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் அறைகூவல் விடுத்திருக்கிறது. 

 

இதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வருகிற 27-ந்தேதி திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

 

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன் என்று ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகளில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. இந்நிலையில் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்துகிற போராட்டம் மத்திய பாஜக. அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | 'விக்ரம்' ஓவர்; கட்சிப் பக்கம் திரும்பினார் கமல்! - அடுத்த மாஸ்டர் பிளான் ஸ்டார்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More