Home> Tamil Nadu
Advertisement

காலை உணவு திட்டத்தின் மெனு: சிறுதானியம் முதல் ரவா கிச்சடி வரை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தின் மெனு.  

காலை உணவு திட்டத்தின் மெனு: சிறுதானியம் முதல் ரவா கிச்சடி வரை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். மதுரை ஆதிமுலம் மாநகராட்சி பள்ளியில் வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளிக் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார். அப்போது, அருகில் அமர்ந்திருந்த குழந்தைகளுக்கும் தன் கையால் உணவை ஊட்டி மகிழ்ந்த முதலமைச்சர், எவ்வளவு நிதிச் சிக்கல் வந்தாலும், இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதே தன்னுடைய இலக்கு என்று சூளுரைத்தார்.

முதல் கட்டமாக நகராட்சி மற்றும் மாநகராட்சி, தொலைதூர கிராமங்களில் இருக்கும் பள்ளிகளில் தொடங்கப்படும் இந்த திட்டம் படிப்படியாக மாநிலம் முழுவதும் இருக்கும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில், தினம்தோறும் காலையில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியல் வெளியாகியுள்ளது.   

உணவு வகைகள்

திங்கள் - அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்.
செவ்வாய் - ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி.
புதன் - வெண் பொங்கல், ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்.
வியாழன் - அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
வெள்ளி - ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி + ரவா கேசரி, சேமியா கேசரி.

* வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி.

முதல் கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் காலை உணவை சாப்பிட இருக்கின்றனர். காலை சிற்றுண்டி திட்டத்தை முறையாக செயல்படுத்த ரூ.33.56 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. தினசரி காலை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள் காலை உணவு வழங்கப்பட இருக்கிறது. சமையலுக்கு உள்ளூர் சமையல் எண்ணெய் மற்றும் காய்கறிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மேலாண்மை குழு, சமைக்கப்படும் உணவை தினசரி ருசி பார்த்து மேலாண்மை செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | குழந்தைகளுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்த முதலமைச்சர்; காலை உணவு திட்ட தொடக்க விழா புகைப்படங்கள்

மேலும் படிக்க | காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More