Home> Tamil Nadu
Advertisement

பொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

பொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை பிரதமர் மறுபரீசிலினை செய்ய வேண்டும் என்று .முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

பொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை பிரதமர் மறுபரீசிலினை செய்ய வேண்டும் என்று .முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் (MK Stalin) இன்று பிரதமருக்கு பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி எழுதியுள்ள கடிதத்தில் நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள் நம் அனைவருடைய பொதுச் சொத்தாகும்.

அவற்றில் பலவும் இந்தியாவை தொழில்மயமான தற்சார்புடைய நாடாக நிலைநிறுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பதற்கு மாநிலங்களுக்குச் சொந்தமான அரசு நிலங்களோடு மக்களின் நிலங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதனால் நிறுவனங்களின் மீது மக்களுக்குப் பெருமையும், உரிமையும் உள்ளது.

ALSO READ: TN Weather Update: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

மேலும் "இந்தப் பணமாக்கல் என்னும் நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் தொடர்புடைய நிறுவனங்களின் பணியாளர்கள் மீதும் இந்நிறுவனங்களைச் சார்ந்து இயங்கும் சிறு,குறு தொழில்துறை மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெரியவில்லை.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை வைத்து பார்க்கும் போது இவ்வளவு பெரிய அளவிலான தனியார்மயமாக்கல் நடவடிக்கையை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அது விலைமதிப்பற்ற அரசு சொத்துக்கள் ஒரு சில குழுக்கள் அல்லது பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்கே வழிவகுக்கும். 

எனவே ஒன்றிய அரசினுடைய (Union government) பொதுச் சொத்துக்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் மேலும்   இந்நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களுடனும் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பின்னரே இது போன்ற பெரிய முடிவுகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.!

இவ்வாறு அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.!

ALSO READ: 75 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: தமிழக அரசு அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More