Home> Tamil Nadu
Advertisement

தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும்

தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும்

தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் 210 நாட்கள் வேலை நாட்களாக உள்ளது. எனவே, விடுமுறையை நீட்டிக்க வாய்ப்பில்லை. விடுமுறையை அதிகரிக்கும் பட்சத்தில் பாடத்தை முழுமையாக மாணவர்களிடத்தில் கொண்டு செல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

Read More