Home> Tamil Nadu
Advertisement

தனியார் பள்ளிகள் 75% மட்டும் கட்டணம் வசூலிக்க வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை

தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கல்வி கட்டண தொகையை மட்டும் வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.  

தனியார் பள்ளிகள் 75% மட்டும் கட்டணம் வசூலிக்க வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. பல மாநிலங்கள் ஊரடங்கில் பல தளர்வுகளை (Lockdown Relaxation) அறிவித்த வண்ணம் உள்ளன. தமிழகத்திலும் ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக குறைந்து கொண்டிருக்கின்றது. 

தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கு (TN Lockdown) உள்ள நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்-அப் (Whatsapp) வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. 

ALSO READ | TN Schools: அடுத்த மாதம் பள்ளிகள் திறக்குமா? விரைவில் முக்கிய அறிவிப்பு

இந்த நிலையில் கொரோனா சூழலால் பெற்றோர் பலர் வேலையிழப்பு, நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இருப்பினும் தங்களுடைய பிள்ளைகளின் கல்வியில் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதில் பல பெற்றோர் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இருப்பினும், சிலர் கல்வி கட்டணத்துக்கு கூட வழியில்லாமல், தனியார் பள்ளிகளில் இருந்து மாற்று சான்றிதழ் பெற்று, அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.ஜி.சி.எஸ்.இ., ஐ.பி. போன்ற பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில்.,

தொடர் அங்கீகாரம் புதுப்பிக்காத அனைத்துவகை தனியார் சுயநிதி பள்ளிகள் உடனடியாக தங்கள் பள்ளியின் அங்கீகாரம் புதுப்பிக்க உரியமுறையில், முழுமையான வடிவில் கருத்துரு தயார் செய்து அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே பெறப்பட்ட சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், 2021-22-ம் கல்வியாண்டில் கட்டண நிர்ணயக்குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள படிப்பு கட்டணத் தொகையில் 75 சதவீதம் தொகையை மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். மேலும் சீருடை, பஸ் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களை செலுத்துமாறு வற்புறுத்தக்கூடாது.

2021-22-ம் கல்வியாண்டிற்கான கட்டண நிர்ணயக்குழுவின் ஆணையின் நகல் மற்றும் 75 சதவீதம் படிப்பு கட்டணத் தொகை விவரத்தை அவரவர் பள்ளியின் தகவல் பலகையில் பெற்றோர் அறிந்துகொள்ளும் விதமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும். மேலும் பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கையில் அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கபட்டு உள்ளது.

ALSO READ | Bus Pass Validity: 1000 ரூபாய் பாஸ் ஜூலை 15 வரை செல்லும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More