Home> Tamil Nadu
Advertisement

வேலூர் நிர்பயா: 24 வயது பெண்ணை கற்பழித்த கும்பல்; 2 பேர் கைது

வேலூரில் 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு நபர்களை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். கத்திமுனையில் மூன்று ஆண்கள், அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

வேலூர் நிர்பயா: 24 வயது பெண்ணை கற்பழித்த கும்பல்; 2 பேர் கைது

வேலூர்: தேசிய தலைநகரம் புது டெல்லியில் 2012 ஆம் ஆண்டு நடந்த நிர்பயா கும்பல் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக கோபம் நாட்டில் இன்னும் குறையவில்லை. ஆனால் இதுபோன்ற வழக்குகள் ஒவ்வொரு நாளும் வந்துக்கொண்டு தான் இருக்கிறது. சமீபத்திய வழக்கு தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 24 வயது பெண்ணை, மூன்று ஆண்கள் கத்தி முனையில் பலாத்காரம் செய்து, பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அப்பொழுது அந்த பெண்ணின் காதலனுக்கும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இந்த சம்பவம் இரவு 7 மணிக்கு வேலூர் கோட்டை அருகே நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த இடம் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது மற்றும் தலைநகர் சென்னையிலிருந்து 140 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 

அந்த பெண்ணின் காதலனை அடித்து உதைத்து, அவரது உடமைகளை கும்பல் எடுத்துச் சென்றதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

செய்தி சேனல் அறிக்கையின்படி, இந்த வழக்கில் 18 வயது சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மீதமுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேடப்பட்டு வருகிறார்கள். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் திருட்டு தொழில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

வேலூரைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கூறுகையில், மூன்று பேர் கும்பல் அந்தப் பெண்ணை முதலில் கூட்டு பலாத்காரம் செய்த பின்னர், அவரிடம் இருந்த மொபைல் போன்கள், தங்க நகைகளை பறித்துள்ளனர் எனக் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் தலைமறைவாக உள்ளதாகவும், அவரை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிதடார். 

சமீபத்திய அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது. 2018 ஆம் ஆண்டில், 85% வழக்குகளில் 34,000 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 27% வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Read More