Home> Tamil Nadu
Advertisement

Tamil Nadu Lok Sabha Election Result: தமிழகத்தில் பாஜகவின் தற்போதைய நிலை என்ன?

Tamil Nadu Lok Sabha Election Result: தற்போது இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் பாஜக பின்னடைவில் உள்ளது.  

Tamil Nadu Lok Sabha Election Result: தமிழகத்தில் பாஜகவின் தற்போதைய நிலை என்ன?

Tamil Nadu Lok Sabha Election Result: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது தற்போது வரை 36 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது அதிமுக இரண்டு இடங்களிலும் பாஜக ஒரு இடங்களிலும் நாம் தமிழர் கட்சி ஜீரோ இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.  பாஜக அதிகம் எதிர்பார்த்த சில இடங்களில் கூட பின்னடைவை சந்தித்து வருகின்றனர். கோவையில் அண்ணாமலை, சென்னையில் தமிழசை மற்றும் வினோஜ் போன்றவர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் பாஜகவிற்கு எத்தனை மக்களவை தொகுதிகள் கிடைக்கும்?

தர்மபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக முன்னிலையில் உள்ளது. அங்கு அன்புமணி ராமதாஸின் மனைவி முன்னிலையில் உள்ளார்.  பாஜக நேரடியாக போட்டியிட்ட எந்த தொகுதிகளிலும் முன்னணியில் இல்லாத நிலையில் இந்த ஒரு இடத்தில் மட்டுமே முன்னணியில் உள்ளது, அதுவும் பாமகவின் வாக்கு வங்கி அதிகம் உள்ள தர்மபுரி தொகுதியில் முன்னணி பெற்றுள்ளது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மணி மற்றும் அதிமுக வேட்பாளர் அசோகனை முந்தி சவுமியா அன்புமணி முன்னிலையில் உள்ளார்.

மேலும் ஆச்சரியப்படுத்தும் விதிமாக கோவையில் அண்ணாமலை ஒரு வாக்கு சாவடியில் வெறும் ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியுள்ளார். இது அந்த பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலியில் ஆரம்பத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்து வந்தார். ஆனால் தற்போது காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் முன்னணியில் உள்ளார். இருப்பினும் நயினார் நாகேந்திரன் போட்டி போட்டி வருகிறார்.

மேலும் படிக்க | Tamil Nadu Lok Sabha Election Result: மக்களவை தேர்தலில் திமுக கொடுத்துள்ள வாக்குறுதிகள்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More