Home> Tamil Nadu
Advertisement

TN Exit Polls : தமிழ்நாட்டில் மாற்றங்கள் நிகழுமா? வெற்றி வாய்ப்பு யாருக்கு? முழு விவரம்..

Tamil nadu Exit Polls Result 2024 ​:  மக்களவை தேர்தல் நடந்து முடிந்திருப்பதை தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளிவந்திருக்கின்றன. இதில், யார் யார், எந்தெந்த தொகுதியில் ஜெயிக்க வாயிப்பிருக்கிறது என குறிப்பிடப்பட்டிருக்கிறது.   

TN Exit Polls : தமிழ்நாட்டில் மாற்றங்கள் நிகழுமா? வெற்றி வாய்ப்பு யாருக்கு? முழு விவரம்..

Tamil nadu Exit Polls Result 2024 ​: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 2024 நடந்து முடிந்திருக்கிறது. தமிழகத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முழு மூச்சாக தேர்தல் நடந்து முடிந்தது. 7 கட்டமாக நடைபெற்ற தேர்தலில், முதல் கட்டம் நடந்ததே தமிழ்நாட்டில்தன். 

நாடாளுமன்ற தேர்தல் 2024:

ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் தேர்தலாக இருந்தது, இந்த ஆண்டின் நாடாளுமன்ற தேர்தல். குறிப்பாக, தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்களில் யார், யார் எந்தெந்த தொகுதிகளில் வெற்றி பெற இருக்கிறார்கள், யாருக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் அனைவரும் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

போட்டியிட்ட கட்சிகள்:

தமிழகத்தை பொறுத்தவரை, திமுக-காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ‘INDIA’ கூட்டணி மூலமாக போட்டியிட்டன. பாஜக கட்சியுடன் பாட்டாளி மக்கள் கட்சொ, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்டகட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதே போல, CPI, CPIM, விடுதலை சிறுத்தைகள் கட்சி, எம்டிஎம்கே, அஇஅதிமுக, தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. 

பரபரப்பாக நடந்த பிரச்சாரங்களும்-தேர்தலும்:

தேர்தலுக்கு முந்தைய வாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியே தமிழகத்திற்கு வந்திருந்து, தனது கட்சியின் போட்டியிடும் தொகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். பாஜக மாநில கட்சி தலைவர் அண்ணாமலையும் தன் பங்கிற்கு அனைத்து தேர்தல் பணிகளையும் செய்தார். இதையடுத்து, திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பாக தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் பெரிய அளவில் மாநாடுகள் நடைப்பெற்றன. இதில், ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். இந்த தேர்தல் முடிந்துள்ளதை தொடர்ந்து, இன்று கருத்துகணிப்பு வெளியாகியுள்ளன. இதில், தமிழகத்தில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகளில் யார் யாருக்கு ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது என்பது கூறப்பட்டுள்ளது. 

தேர்தல் கருத்துக்கணிப்பு:

இந்தியா டுடேவின் கருத்து கணிப்பின் படி, தமிழகத்தில் பாஜக 1 முதல் 3 தொகுதிகளில் ஜெயிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், காங்கிரஸ்+இந்தியா கூட்டணி கட்சி 26 முதல் 30 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பிருப்பதாகவும், பிற கட்சிகள் 6-8 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக கட்சிக்கு 0 முதல் 2 தொகுதி கிடைக்கும் என்றும் தேர்தல் கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜான் கி பாத் கருத்து கணிப்பின்படி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 34முதல் 38 தொகுதிகளில் ஜெயிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதிமுகவிற்கு 1 தொகுதி கிடைக்கும் என்றும், பாஜக கட்சிக்கு 5 தொகுதிகள் கிடைக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Exit Polls Result 2024 live update: வெளிவந்தன எக்சிட் போல் முடிவுகள்... யார், எங்கு வெற்றி பெறுகிறார்கள்? முழு விவரம் இதோ

டிவி 9 கருத்து கணிப்பின் படி, திமுக கட்சிக்கு 35 தொகுதிகள் கிடைக்கும் என்றும், அதிமுகவிற்கு எந்த தொகுதியிலும் ஜெயிக்க வாய்ப்பில்லை என்றும், பாஜக 4 தொகுதிகளில் ஜெயிக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஏபிபி சி வோட்டரின் கருத்து கணிப்பின் படி, திமுக விற்கு அதை சார்ந்த கட்சிகளுக்கு 37-39 தொகுதிகள் கிடைக்கும் என்றும் அதிமுக மற்றும் பிற கட்சிகள் ஜெயிக்க வாய்ப்பில்லை என்றும், பாஜக 2 தொகுதிகளை பிடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

தேர்தல் முடிவுகள் எப்போது?

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இம்மாதம் (ஜூன்) 4ஆம் தேதி வெளியாகிறது. இந்த தேர்தல் முடிவுகளுக்கு பின்னர்தான், யாருக்கு எந்த தொகுதி கிடைத்திருக்கிறது என்பது தெரியவரும். 

மேலும் படிக்க | ஊடகத்துறையில் இதுவே முதல்முறை... AI உதவியுடன் Zee News Exit Poll - இதனால் என்ன நன்மை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More