Home> Tamil Nadu
Advertisement

Tamil Nadu lockdown: தமிழகத்தில் வார இறுதி ஊரடங்கு! இந்த சேவைகள் உண்டு

தமிழ்நாட்டில் இன்று கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஞாயிறு லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

Tamil Nadu lockdown: தமிழகத்தில் வார  இறுதி ஊரடங்கு! இந்த சேவைகள் உண்டு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஞாயிறு லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு (Covid-19 Disease) எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு 30,744 அக பதிவாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இன்று, வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி உண்டு. ரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும். 

ALSO READ | Omicron தாக்கம் ஓராண்டு இருக்கும், Brain Fog மூளையை பாதிக்கும்

கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு லாக்டவுன் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

அத்தியாவசியம் இல்லாத அனைத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது பேருந்து போக்குவரத்து சேவை இன்று இயங்காது.

தியேட்டர்கள், மதுபான கடைகள், மத வழிபாட்டு மையங்கள் ஆகியவை இன்று இயங்காது. பிற வார நாட்களில் நிலவும் கட்டுப்பாடுகள் எப்போதும் போல தொடரும்

fallbacks

கோவிட்-19 நோய் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், நீங்கள் விரைவான காப்பூக்கிச் சோதனை (Rapid Antigen Test)  பி.சி.ஆர். சோதனை (PCR test) செய்துக் கொள்ளவும்.

மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தொண்டைப்புண், வறட்டு இருமல் போன்ற நோய் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கவும்.

தலைவலி, சுவை மற்றும் வாசனை இழப்பு அல்லது அவற்றில் மாற்றம், பசியின்மை அல்லது குமட்டல் (nausea) இருந்தால் அதிக கவனமாக இருக்கவும்.

ALSO READ | தடுப்பூசி தகவல்கள் தரவு கசிந்தது CoWIN செயலியில் இருந்து அல்ல!

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட (Covid-19 Disease) அனைவரும்  தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் 2 ம் ஞாயிறான இன்று சுற்றுலா நகரமான உதகையில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள்  காணப்படுகின்றன மாவட்டம் முழுவதும் சுமார் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்...

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று நயாகரா என அழைக்கப்படும் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

இதனால் ஒகேனக்கல் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.. ஆனால் கர்நாடகா மாநிலத்தில் இன்று ஊரடங்கு இல்லாததால் கர்நாடமாக மாநில சுற்றுலா பயணிகள் கர்நாடக மாநிலம் மாறுக்கொட்டாய் பகுதி வழியாக  ஒகேனக்கல்லுக்கு வந்து சுற்றி பார்த்து விட்டு செல்கின்றனர்.

தமிழகம் மட்டும் அல்லாமல், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் உள்ள அருவிக்குக் வருவது வழக்கம்.

அங்கு குளித்தும்,பரிசல் சவாரி செய்தும் இயற்க்கை அழகை கண்டு ரசிக்கும் மக்களுக்கு கொரோனா மூன்றாவது அலை மற்றும ஒமைக்ரான் வைரஸ் பரவல் சிரமங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

ALSO READ | தமிழகத்தில் வார இறுதி ஊரடங்கு! இந்த சேவைகள் உண்டு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More