Home> Tamil Nadu
Advertisement

தமிழக சட்டப்பேரவை ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடத்த முடிவு

தமிழக சட்டப்பேரவைகூட்டத் தொடர் வரும் 28 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 31 ஆம் தேதி வரை நடத்த முடிவு

தமிழக சட்டப்பேரவை ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடத்த முடிவு

சென்னை: சென்னையில் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் துரைமுருகன், சக்கரபாணி, காங்கிரஸ் சார்பில் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், "தமிழக சட்டப்பேரவைகூட்டத் தொடர் வரும் 28 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 31 ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் கூறியது, "தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் தனபால் கூறியுள்ளார். ஜூலை 1 ஆம் தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும். அனைத்து நாட்களும் கேள்வி - பதில் இடம்பெறும். மறைந்த உறுப்பினர்களுக்கு வரும் 28 ஆம் தேதி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனக் கூறினார்.

Read More