Home> Tamil Nadu
Advertisement

TN HSC Results 2023 Date: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது, எப்படி, எதில் பார்ப்பது?

TN HSC Results 2023 Date: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யொமொழி வரும் மே 8ஆம் தேதி காலை 9. 30 மணிக்கு வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டது. 

TN HSC Results 2023 Date: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது, எப்படி, எதில் பார்ப்பது?

TN HSC Results 2023 Date: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி, ஏப். 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியிடப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், நீட் தேர்வு நாடு முழுவதும் மே 7ஆம் தேதி நடைபெறுவதால், மாணவர்களிடம் தேவையற்ற மன உளச்சலை தவிர்ப்பதற்காக பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளிவைக்கப்படும் என அறிவித்தது. அதன்படி, நீட் தேர்வு நடைபெற்று முடிந்த அடுத்த நாளான மே 8ஆம் தேதி தேர்வு முடிவுகள் நடைபெறும் என பின்னர் அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வரும் மே 8ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடுவார். பின்னர், தேர்வு முடிவுகளுக்கான இணைய இணைப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். இதனை கிளிக் செய்து, அந் பக்கத்திற்கு நேரடியாக செல்லலாம். 

மேலும் படிக்க | CBSE Result 2023 மிகப்பெரிய அப்டேட்: இந்த நாளில் வெளிவரும் தேர்வு முடிவுகள்... எப்படி செக் செய்வது?

மாணவர்கள் தங்கள் ரோல் நம்பர் உள்ளிடுவதன் மூலம் ஆன்லைனில் தங்கள் முடிவுகளை அணுகலாம். தேசிய தகவல் மையங்கள் (NIC) அதிகாரப்பூர்வ இணையதளத்தில், கூடுதலாக தமிழ்நாட்டின் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இலவசமாக அணுகலாம். மேலும், பள்ளி மாணவர்களின் தேர்வு முடிவுகளை அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பிவைக்கும். 

2023இல் மாணவர்கள் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற, அவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 100க்கு 35 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். பிரித்தெடுக்கப்பட்ட படிப்புகளில் சேரும் மாணவர்களும் இந்த விதியை கடைபிடிக்க வேண்டும். தியரி மற்றும் பிராக்டிக்கல் தேர்வுகள் கொண்ட பாடங்களுக்கு, மாணவர்கள் தேர்வின் இரண்டு பிரிவுகளிலும் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் போதுமான மதிப்பெண்களைப் பெறத்தவறும், மாணவர்களுக்கு துணை தேர்வுகளுக்கான விண்ணப்பம் அன்றே தொடங்கப்படும்.

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் அல்லது ஜூலையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களிலும், வெளிநாட்டில் உள்ள 14 நகரங்களிலும் மே 7ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற உள்ளது.  

பேனா மற்றும் காகிதம் முறையில் இந்த நீட் தேர்வு நடைபெறுகிறது. இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வின் அட்மிட் கார்டு மற்றும் தேர்வு நகரத்திற்கான அறிவிப்பு சீட்டு ஆகியவை தேசிய தேர்வு முகமையால் (NTA) விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | அனிதா நினைவு அரங்கம்: முதல்வருக்கு அனிதாவின் அண்ணன் நன்றி
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More