Home> Tamil Nadu
Advertisement

7 பேர் விடுதலை; சுமுகமான முடிவெடுப்பார் ஆளுநர் -ஜெயக்குமார்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் சுமுகமான முடிவு எடுப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!

7 பேர் விடுதலை; சுமுகமான முடிவெடுப்பார் ஆளுநர் -ஜெயக்குமார்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் சுமுகமான முடிவு எடுப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் சிறையில் கடந்த 25 ஆண்டுகளாக உள்ளனர். அவர்களை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில், தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 9-ஆம் நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தன்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக ஆளுநருக்கு இன்றே பரிந்துரை செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டது. 

இந்த முடிவின்படி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தன்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. எனினும் இதுவரையிலும் தமிழக ஆளுநர் அமைதி காத்து வருகின்றார். எனவே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைகுறித்து தமிழக மக்களிடன் குழப்பம் நிலவி வருகின்றது.

இந்நிலையில் இன்று சென்னை மெரினா கடற்கரையில் செய்தியாளர்களிடன் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களிடன் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளின் விடுதலை குறித்து வினா எழுப்பப்பட்டது. இந்நிகழ்வின் போது "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் சுமுகமான முடிவு எடுப்பார்" என அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Read More