Home> Tamil Nadu
Advertisement

தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக தரம் உயர்ந்த ஆவடி!!

தமிழகத்தில் ஆவடி நகராட்சியை 15_வது மாநகராட்சியாக தரம் உயர்த்தி இன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக தரம் உயர்ந்த ஆவடி!!

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தின் ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆவடியை மாநகராட்சியாக அறிவிக்கும் முடிவு உடனே அமலுக்கு வருகிறது. 

இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தின் நகராட்சியாக இருந்து வந்த ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இது சென்னைக்கு அருகில் உள்ளது. ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சி மற்றும் நெமிலிச்சேரி, நசரத்பேட்டை, வானகரம், காட்டுப்பாக்கம் உட்பட 11 கிராம பஞ்சாயத்துகளும் ஆவடி மாநகராட்சியில் அடங்கும்.

தமிழகத்தில் சென்னை, சேலம், மதுரை, கோவை உள்பட மொத்தம் 14 மாநகராட்சிகள் உள்ள நிலையில், தற்போது மேலும் மாநகராட்சி உருவாகி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்து உள்ளது. அப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது.

Read More