Home> Tamil Nadu
Advertisement

5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது: தனுஷ்

5ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்று தனுஷ் டிவிட்.

5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது: தனுஷ்

5ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்று தனுஷ் டிவிட்.

தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும், 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அதற்கேற்ற வகையில், சிறப்பு வகுப்புகளை நடத்தி, மாணவர்களை தயார்படுத்தி வந்தன. அதேவேளையில், 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பினரும், அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், 5ஆவது மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு அரசாணையை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அறிவிப்பை வெளியிட்டார். இவரது இந்த முடிவுக்கு பலரும் பாராட்டி வருகின்றனர். 

அந்தவகையில் தற்போது நடிகர் தனுஷ் கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், 

5ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது .இது குழந்தைகளுக்கு மனஅழுத்தத்திலிருந்தும் , பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியையும், சமூகத்திற்கு சமத்துவ ஆரோக்கியத்தையும் நிலைபெறச்செய்யும் .வாழ்த்துக்கள்.. நன்றி...

 

 

என அவர் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  

Read More