Home> Tamil Nadu
Advertisement

ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவித்த தமிழக அரசு

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போனஸ் வழங்க ரூ. 210 கோடி 48 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவித்த தமிழக அரசு

Chennai: பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை (Deepavali Bonus) தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போனஸ் வழங்க ரூ. 210 கோடி 48 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழத்தில் உள்ள C மற்றும் D பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும்.

சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10% போனசாக கிடைக்கும். முதலில் போக்குவரத்து, மின்சாரம் என மாநில பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரிய ஊழியர்களுக்கு 8.33% போனஸ்+11.67% கருணைத் தொகை என 20% தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று நோயின் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சரிவு மற்றும் நிதிச்சுமை கருத்தில் கொண்டு 10% சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு (TN Govt) அறிவித்துள்ளது.

அதேபோல நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத்தொகையாக ரூ.8,400 பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

fallbacks

ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More