Home> Tamil Nadu
Advertisement

Tamil Nadu Election 2021: AIADMK கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இப்படி இருக்குமா?

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபரப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது.

Tamil Nadu Election 2021: AIADMK கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இப்படி இருக்குமா?

Tamil Nadu Assembly Elections: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபரப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது.

ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க (AIADMK), எதிர்கட்சியான திமுக என இரண்டும் எதிரும் புதிருமாய் நின்றாலும் வேறுபல இணைப்புகலும், பல்டிகளும், எதிர்பாராத திருப்பங்களும் நடைபெறுவது தினசரி வாடிக்கையாகிவிட்டது. 

மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. தேர்தல் (Election Campaign) அறிவிப்பும், அறிவிக்கையும் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

இது வழக்கமான நடைமுறை தான் என்றாலும், கொரோனாவுக்கு (Coronavirus) பிறகு நடைபெறும் தமிழகத்தின் முதல் தேர்தல் இது. தமிழகத்தின் முக்கியத் தலைவர்களான ஜெ.ஜெயலலிதா மற்றும் மு.கருணாநிதி என்ற இரு ஆளுமைகள் இல்லாமல் ஆலமரத்தின் விழுதுகளே தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும் சூழல் இது.

Also Read | தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த முதலமைச்சர்

எது எப்படியிருந்தாலும், ஆட்சியும் கட்சியும் தங்களுக்கே சொந்தம் என நிரூபிக்க கிடைக்கும் வாய்ப்பு இது என்பதில் தமிழகத்தின் பிரதான திராவிட கட்சிகள் நிரூபிப்பதில் மும்முரமாயிருக்கின்றன.

தேர்தல் கணிப்புகள் எப்படியிருந்தாலும், முடிவுகளை யாராலும் கணித்துவிட முடியாது. சசிகலாவின் வருகை, நீண்ட நாளைக்கு பிறகு விஜயகாந்த் பொது இடத்திற்கு வந்தது, ரஜினியின் அரசியல் பிரவேசம், புஸ்வாணமான நிலை, கமலஹாசனின் மும்முரமான தேர்தல் சுற்றுப் பயணங்கள் என தேர்தல் பரபரப்புத் தொடங்கிவிட்டன.

Also Read | New Labour Laws: கூடுதல் நேரம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு Good News

தமாகா, பாமக (PMK), தேமுதிக என பல கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை திரை மறைவில் நடந்து வருகின்றன. கடந்த மக்களவை தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதே கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடருமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதிமுக உடனான கூட்டணியை பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உறுதி செய்துவிட்டார்.

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை முன்னிறுத்தி பாமக பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை இட்டால், தங்களை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று தேமுதிகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் (Lok Sabha Elections) இருந்த கூட்டணியே தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகம் என்றாலும், தொகுதி பங்கீடு விஷயத்தில் சிக்கல் அதிகமாகலாம்.  

இதன் அடிப்படையில் அரசியல் நோக்கர்களின் கணிப்புகளின்படி அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமக 22, பாஜக 21, தேமுதிக 11, தமாகா 8, புதிய தமிழகம் கட்சி 2 என்ற எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெறலாம்.

தேர்தல் திருவிழா களைகட்டிய நிலையில் இந்த கணிப்புகள் நிதர்சனமாகுமா அல்லது தலைகீழாக மாறுமா என்பதை அறுதியிட்டு உறுதியாக சொல்லிவிட முடியாது.

ALSO READ: இந்த நான்கு வட்டங்களிலும் Vodafone Idea விலை உயர்கிறது!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More