Home> Tamil Nadu
Advertisement

குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை திறக்கக்கோரி குஜராத் முதல்வருக்கு EPS கடிதம்!!

புலம்பெயர்ந்த தமிழ் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி புகட்டி வந்த ஒரு தமிழ் பள்ளி, குறைவான மாணவர் வருகை காரணமாக திடீரென மூடப்பட்டதால் தான் வருத்தப்படுவதாக பழனிசாமி கூறினார்.

குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை திறக்கக்கோரி குஜராத் முதல்வருக்கு EPS கடிதம்!!

சென்னை: குஜராத் தலைநகர் அகமதாபாதில் (Ahmedabad) மூடப்பட்டிருக்கும் ஒரு தமிழ் பள்ளியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு குஜராத் முதல்வர் விஜய் ரூபானியை (Vijay Rupani) தமிழக முதலமைச்சர் கே பழனிசாமி வியாழக்கிழமை வலியுறுத்தினார்.

முக்கியமாக புலம்பெயர்ந்த தமிழ் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி புகட்டி வந்த ஒரு தமிழ் பள்ளி, குறைவான மாணவர் வருகை காரணமாக திடீரென மூடப்பட்டதால் தான் வருத்தப்படுவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ALSO READ: இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழக நிபுணர்கள் அவசியம்: Modi-க்கு EPS கடிதம்!!

இந்த தமிழ் குழந்தைகள் இப்போது கல்வியைத் தொடர வேறு வழியில்லாமல் இருக்கின்றனர். ரூபானியின் தலையீட்டைக் கோரிய அவர், தமிழ் பள்ளி தொடர்வதற்கு "பொருத்தமான உத்தரவுகளை பிறப்பிக்க" வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அகமதாபாத்தில் உள்ள இந்த தமிழ் பள்ளியைத் தொடர்வதற்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்கத் தயாராக உள்ளது என்று முதல்வர் உறுதியளித்தார். தமிழ் ஒரு பண்டைய மொழி, குஜராத்தில் வாழும் தமிழர்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிப்பு அளித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

"குஜராத் அரசாங்கம் தமிழ் மொழியியல் சிறுபான்மையினரின் கல்வி உரிமைகளைப் பாதுகாக்கும் என்று நான் நம்புகிறேன். இது தொடர்பான ஆரம்ப நடவடிக்கைகளை நான் பாராட்டுகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.

ALSO READ: பெண் ஓட்டுனர்களைக் கொண்ட Solar, Electric Auto-க்களை கொடியசைத்து துவக்கி வைத்தார் EPS!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More