Home> Tamil Nadu
Advertisement

உருமாறும் கொரோனா வைரஸ் பற்றி Dec 28 அன்று EPS மருத்துவ நிபுனர்களுடன் முக்கிய ஆலோசனை

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

உருமாறும் கொரோனா வைரஸ் பற்றி Dec 28 அன்று EPS மருத்துவ நிபுனர்களுடன் முக்கிய ஆலோசனை

உலகனே கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ளது. பல ஆராய்ச்சிகள் மற்றும் அயராத உழைப்புக்கு பிறகு சில நாடுகளில் இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில், கொரோனா வைரசின் உருமாற்றம் பெற்ற மற்றொரு வகை வேகமாக பரவி வருவதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் தீவிர கதியில் பொது முடக்கம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வைரஸ் மாறுபாடு பரவாமல் இருக்க, இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன.

இங்கிலாந்திலிருந்து (England) இந்தியா வந்திறங்கிய சிலருக்கும் இந்த தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி வழியாக சென்னை வந்த 5 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் (Vijayabaskar) தெரிவித்தார். கடந்த பத்து நாட்களில் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களின் விவரங்கள் பெறப்பட்டு அவர்களையும் கண்காணித்து சோதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ALSO READ: New COVID-19 strain: UK இல் இருந்து இந்தியா வந்த சிலருக்கு கொரோனா; மத்திய அரசு புதிய திட்டம்!

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் (Coronavirus) பற்றியும், இது தமிழகத்தில் பரவாமல் இருக்க வேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முடிவு செய்ய, மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) அவர்கள் வரும் 28 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளார்.

தற்போதுள்ள கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் இம்மாதம் 31 ஆம் தெதியுடன் நிறைவடைவதால், புதிய வைரஸ் தொற்றையும் மனதில் கொண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் (Tamil Nadu) மட்டுமின்றி, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் இன்னும் சில பகுதிகளிலும், இங்கிலாந்தில் இருந்து வந்த சிலருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறையும் இது குறித்து பல அவசர நிலை ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க போதிய முன்னெச்சரிகை நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. 

ALSO READ: லண்டனில் இருந்து டெல்லி வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More