Home> Tamil Nadu
Advertisement

DMDK தலைவர் விஜயகாந்திற்கு தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாகவும் தன்னைத் தேடி வருபவர்களுக்கு எந்த இக்கட்டான சூழ் நிலையிலும் கூட உதவி செய்யும் ஈகை குணத்தை அடிப்படையிலேயே கொண்டவரும் தன் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக மக்களாலும் அன்போடு கேப்டன்(Captain) என்று அழைக்கப்படும் விஜயகாந்த் (Vijayakanth) அவர்களின் 69ஆவது பிறந்த தினம் (Birthday) இன்று!!

"தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Chief minister)(M.K.Stalin) தனது ட்விட்டர் பக்கத்தில் தே.மு.தி.க நிறுவனரும் தமிழக மக்களின் அன்பைப் பெற்ற கதாநாயகருமான நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீண்ட நாட்கள் உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்று தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.!!!

"திரைத் துறையில் கால்பதித்த விஜயகாந்த் பின்பு 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (DMDK) என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலிலும் துணிச்சலாக தடம் பதித்தார்.

கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் வருடம் தோறும் தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளன்று தனது கட்சி தொண்டர்களையும், ரசிகர்களையும் விஜயகாந்த் சந்திப்பது வழக்கம்.

ஆனால் தற்போது கொரோனா(Corona) பெருந்தொற்று காரணமாக இந்த வருடம் பிறந்தநாளிற்கு தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாமென்று தொண்டர்களுக்கு அன்பான வேண்டுகொள் விடுத்துள்ளார்.

Also Read | மணமக்கள் நேரில் ஆஜராகமலேயே திருமணம் நடத்துவது சாத்தியமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More