Home> Tamil Nadu
Advertisement

மே 11 சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும்

சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மே 11 சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும்

சென்னை மே 8: சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மே 11 ஆம் தேதி எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அடுத்த நாள் (மே 12 ) சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி 234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டப்பேரவை தேர்தல் (TN Assembly Election 2021) நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2 ஆம் தேதி (May 2) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. திமுக 133 இடங்களிலும், அதிமுக 66 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 14 இடங்களையும், பாரதீய ஜனதா கட்சி 4, பாட்டாளி மக்கல் கட்சி 5, விடுதலை சிறுதைகள் கட்சி 4, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களையும் வென்றது.

 

அதாவது முதலிடம் பிடித்த திமுக (DMK) கூட்டணி 159 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது.  அதிமுக (AIADMK) கூட்டணி 75 இடங்களில் வென்று இரண்டாம் இடம் பிடித்தது. அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து பெற்றுள்ளது. 

மேலும் நேற்று தமிழக ஆளுநர் முன்னிலையில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலினும் (M.K. Stalin) , அவருடன் 34 எம்எல்ஏக்கள் அமைச்சராகவும் பதிவியேற்றுக் கொண்டனர். 

ALSO READ |  சறுக்கும் பாமக, தேமுதிக! நாதக முன்னேற்றம்! அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் எவ்வளவு?

fallbacks

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More