Home> Tamil Nadu
Advertisement

சமஸ்கிருதத்தை விட பழமையானது தமிழ்மொழி என புகழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி

சமஸ்கிருதத்தை விடவும் தமிழ்மொழி பழமையானது. அந்த தமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது என பிரதமர் மோடி மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்

சமஸ்கிருதத்தை விட பழமையானது தமிழ்மொழி என புகழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் லட்சக் கணக்கான மாணவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் இணைக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லி ''டெக்கோட்டா ஸ்டேடியத்தில்'' என்ற இடத்தில் இன்று காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:- 

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம். இதனை மாத்திரை போல் உட்கொள்ள முடியாது. தன்னம்பிக்கை என்பது நமக்கு நாமே சவால் நிர்ணயம் செய்யும் போதும், கடினமாக உழைக்கும் போது தான் வரும். தேர்விற்கு ஒருவர் நன்றாக தயார் செய்ய முடியும். ஆனால், தன்னம்பிக்கை இல்லாவிட்டால் தேர்வில் வெற்றி பெற முடியாது. 

 

மதிப்பெண் நம்மை மேம்படுத்திக் கொள்ள சிந்திக்க வேண்டும். நீங்கள் பிரதமரோடு பேசவில்லை. உங்கள் நண்பருடன் பேசி கொண்டிருக்கிறீர்கள். நானும் இங்கு ஒரு மாணவனாக தான் வந்துள்ளேன்

வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள மாணவர்களிடையே மொழிப்பிரச்சனையால் சரியாக உரையாட முடியாமல் போனது. அதற்க்காக வருத்தம் படுகிறேன். மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழியை தெரிந்துக்கொள்ள வேண்டும். 

 

அப்படி பார்த்தால், சமஸ்கிருதத்தை விடவும் மிகவும் பழமையானது தமிழ்மொழி. இது நிறைய பேருக்கு தெரியாது. தமிழ்மொழியின் சிறப்பே நிறைய அழகுகளை தன்னகத்தே கொண்டது. இவ்வளவு பழமையான தமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதது எனக்கு வருத்தம் உண்டு. 

இவ்வாறு மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Read More