Home> Tamil Nadu
Advertisement

மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை: SC

மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி! 

மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை: SC

மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி! 

ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதித்ததையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மெரினா கடற்கரையில் பெரும்வாரியான தமிழர்கள் நடத்திய போராட்டம் வெற்றியில் முடிந்தது.

இதையடுத்து, மெரினாவில் போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த 1 நாள் மட்டும் அனுமதி வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில், தமிழக அரசின் அனுமதியுடன் ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில், சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், தமிழக அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், அப்படி ஒருவேளை சென்னையில் மெரினாவில் போராட்டம் நடத்த வேண்டுமென்றால் தமிழக அரசின் அனுமதியை பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

 

Read More