Home> Tamil Nadu
Advertisement

ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டி விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. 

ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், அதிமுகவைச் சேர்ந்த பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் சொத்து சேர்த்து வைத்துள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 2013ஆம் ஆண்டு வழக்கு பதிந்திருந்தார். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரண்டு நீதிபதிகளான சத்யநாராயணன் மற்றும் ஹேமலதாவின் அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. அப்போது நீதிபதிகளில் ஒருவர் "வழக்கு பதிந்து மேற்படி விசாரணை செய்ய வேண்டும்" என்றும், மற்றொருவர் "வழக்கு பதிவதில் பயன் இல்லை, வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றும் வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதனால், மூன்றாவது நீதிபதியாக நிர்மல் குமார் நியமிக்கப்பட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதற்கிடையே, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதால், வழக்கின் விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடரும் என்று தீர்ப்பளித்து, 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதி நிர்மல் குமார் ஒத்திவைத்தார்.

மேலும் படிக்க | இனியும் மெத்தனம் வேண்டாம்.. எதிர்க்கட்சிகளை எச்சரிக்கும் திருமாவளவன்...

இதற்கிடையில் வழக்கு விசாரணைக்காக நிலுவையில் இருந்தபோதே, முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துவிட்டு ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.

fallbacks

பின்னர், கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் ராஜேந்திர பாலாஜி  தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் காவல்துறை நடந்து கொண்ட விதம் சரியில்லை என்றும், அவரின் முன் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது. அதற்குள் ஏன் அவசர அவசரமாகக் கைது செய்தீர்கள் என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினார்.

பின்னர், தமிழக அரசின் எதிர்ப்பை மீறி ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவரது ஜாமீன் காலம் விரைவில் முடியவுள்ள நிலையில், தன்மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | மோசமான நிலையில் காங்கிரஸ் கட்சி..! தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More