Home> Tamil Nadu
Advertisement

புதுவை நியமன MLA-க்கள் நியமனம் செல்லும் -உச்சநீதிமன்றம்!

புதுச்சேரி நியமன MLA-க்கள் நியமனம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது!

புதுவை நியமன MLA-க்கள் நியமனம் செல்லும் -உச்சநீதிமன்றம்!

புதுச்சேரி நியமன MLA-க்கள் நியமனம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது!

புதுவையில் பாஜகவை சேர்ந்த வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், எஸ்.செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

பதவி பிரமாணம் செய்து வைத்தவுடன், அவர்கள் மூன்று பேரும் சட்டப்பேரவை இருக்கை, பேரவை வளாகத்தில் அலுவலகம் மற்றும் அடையாள அட்டை உள்ளிட்ட MLA-க்களுக்கான சலுகை வழங்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. க.லட்சுமிநாராயணன், திமுக நிர்வாகி தனலட்சுமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் எனத் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து MLA லட்சுமிநாராயணன் இவ்வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கி உச்சநீதிமன்றம் புதுச்சேரி நியமன MLA-க்கள் நியமனம் செல்லும் என தெரிவித்து, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது!

Read More