Home> Tamil Nadu
Advertisement

இது இரண்டும் தான் மாணவிகளின் வாழ்க்கையை சீரழிக்கிறது - அமைச்சர் கீதா ஜீவன்

இளம் பெண்கள், மாணவிகள் இந்த இரண்டு விஷயங்களால்தான் கெட்டுப்போகிறார்கள் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.  

இது இரண்டும் தான் மாணவிகளின் வாழ்க்கையை சீரழிக்கிறது - அமைச்சர் கீதா ஜீவன்

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் துவக்க விழா தூத்துக்குடி ஹோலி கிராஸ் பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார் இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 16,498 மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியபோது,
 
பள்ளியில் பெண் குழந்தைகள் கவனமாக படிக்க வேண்டும் டிவியில் சீரியல் பார்க்கக் கூடாது சினிமா பார்த்தால் கூடவும் 3 மணி நேரத்தில் கதை முடிந்து விடும். ஆனால் சீரியல் நம்மை அடிமைப்படுத்தும் ஆகையினால் பெற்றோர்களுடன் சேர்ந்து டிவி சீரியலை பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க | மீண்டும் சர்ச்சைக்குரிய கதையில் கை வைத்த ‘ஜெய்பீம்’ இயக்குநர்!- எந்த வழக்கு தெரியுமா?

அறிவு ஆற்றலை வளர்க்கும் வகையில் சீரியல் கிடையாது.  பெண்களை தவறான தோற்றம் தந்து வில்லியாக காட்டப்படுகிறது அப்படித்தான் இன்று சீரியல் உள்ளது. ஆகையினால் எப்போதும் பெண் குழந்தைகள் சீரியலை பார்க்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். 

மேலும் செல்போன் நல்ல காரியத்திற்கு பயன்படுத்த வேண்டும் அதில் தேவையில்லாத விஷயம் வருவதை மாணவிகள் தவிர்க்க வேண்டும் தனது மனதை உறுதியாக  வைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரெண்ட்ஸ் ரிக்வெஸ்ட் கேட்கும் போது நீங்கள் கொடுக்கக் கூடாது தெரியாதவர்களுக்கு பிரண்ட்ஸ் ரிக்வெஸ்ட் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதன் மூலம் ஏராளமான பெண் குழந்தைகள் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது ஆகையினால் செல்போனை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

 

மேலும் படிக்க | 95 சதவீதம் குரங்கு அம்மை இதன் மூலம்தான் பரவுகின்றன! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More