Home> Tamil Nadu
Advertisement

ரயில்வே பாலத்தில் தேங்கும் ஊற்றுநீர் - ஆபத்தான முறையில் பாதையைக் கடக்கும் மாணவர்கள்

Mel Aalathur Railway Bridge : ரயில்வே மேம்பாலத்தில் வெள்ளம் போல் தேங்கியிருக்கும் மழைநீர். இடுப்பளவு தண்ணீரில் போக முடியாமல் தவிக்கும் கிராம மக்கள்    

ரயில்வே பாலத்தில் தேங்கும் ஊற்றுநீர் - ஆபத்தான முறையில் பாதையைக் கடக்கும் மாணவர்கள்

ரயில்வே பாதைகளை கடப்பதற்கு க்ராஸிங் லெவலை வைப்பதுண்டு. பெரும்பாலான கிராமங்களில் இதன்மூலமே கிராம மக்கள் ஒரு பாதையில் இருந்து மற்றொரு பாதைக்கு மாறுகிறார்கள். ஒருசில இடங்களில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க வேண்டி வரும். தரைப்பாலம் என்றாலே மழைநீர் தேங்குவது இயல்பு எனினும், ஊற்று நீரும் கலந்தால் என்னாகும்.?

fallbacks

மேலும் படிக்க | திருமண வீட்டில் மது விருந்து ; குடித்துவிட்டு தண்டவாளத்தில் உறங்கிய நண்பர்கள் பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குடியாத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றனர். ஒரு சில ஏரிகள், குளங்கள் கனமழைக் காரணமாக முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இந்நிலையில் குடியாத்தம் அருகே உள்ள மேல்ஆலத்தூர்  ரயில்வே தரைபாலத்தில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. 

fallbacks

அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் ரயில்வே மேம்பாலத்துக்கு அருகில் இருந்து வரும் ஊற்று நீர் ஆகியவை இணைந்து ரயில்வே தரைப்பாலத்தில் குளம்போல் தேங்கியிருக்கிறது. இந்தப் பாலத்தின் வழியாகத்தான் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என அனைவரும் பயன்படுத்துகின்றனர். தற்போது தண்ணீர் இடுப்பளவு தேங்கியுள்ளதால் இந்த வழியை பயன்படுத்த முடியாமல் நிலை உள்ளது. அதனால், பணிக்குச் செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் ரயில்வே தண்டவாளங்களை ஆபத்தான முறையில் கடக்கின்றனர். 

fallbacks

மேல்ஆலத்தூர், ஒலக்காசி, கூடநகரம், அனங்காநல்லூர் நத்தமேடு, பட்டு கொத்தகுப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் ரயில்வே தண்டவாளங்களை ஆபத்தான முறையில் கடப்பதால் விபத்து ஏற்படும் அச்சம் நிலவி வருகிறது. சைக்கிளில் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவிகள், தங்களது சைக்கிளை தூக்கிக் கொண்டு ரயில்வே தண்டவாளங்களைக் கடக்கின்றனர். தரைப்பாலத்தின் தண்ணீரால் பொதுமக்கள் அனைவரும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 

fallbacks

இதுமட்டுமல்லாமல், தரைப்பாலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரால் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இருசக்கர வாகனம் முதல் நான்கு சக்கர வாகன் வரை பல வாகனங்கள் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக மேல்ஆலத்தூர் ரயில்வே தரைபாலத்தில் தேங்கி உள்ள தண்ணீரை  அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இனி வரும் மழைக்காலங்களில் அந்த இடத்தில் தண்ணீர் தேங்காவதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுன் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் படிக்க | ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த இருவர் தவறி விழுந்து பரிதாபமாக பலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More