Home> Tamil Nadu
Advertisement

வெளிநாட்டில் இனி மருத்துவம் படிப்பதில் சிக்கல்; உயர்நீதிமன்றம் அதிரடி!

வெளிநாட்டுகளில் மருத்துவம் பயில்வதற்கு 80% மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது!

வெளிநாட்டில் இனி மருத்துவம் படிப்பதில் சிக்கல்; உயர்நீதிமன்றம் அதிரடி!

வெளிநாட்டுகளில் மருத்துவம் பயில்வதற்கு 80% மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது!

மேற்கிந்திய தீவுகளில் மருத்தும் முடித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த தாமரைச்செல்வன் என்பவர், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்வதற்கு உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அவரது கோரிக்கைளை பரிசீலிக்குமாறு கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தார்.

அதேவேலையில் குறைந்த மதிப்பெண் பெற்று பண பலத்தின் மூலம் வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கான தகுதிச்சான்று வழங்கப்படுவது குறித்து பதில் அளிக்குமாறு இந்திய மருத்துவக் கவுனிசிலுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிடப்பட்டிருந்தது. 

இதற்கு பதில் அளித்துள்ள இந்திய மருத்துவக் கவுன்சில், 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை படித்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதிச்சான்றிதழ் வழங்கப்படுவதாக தெரிவித்தது.

இதனையடுத்து, இந்தியாவில் 90% மதிப்பெண் பெற்ற மாணவர்களே மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள போது, வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர 80% குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கக்கூடாது என்று இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது.

Read More