Home> Tamil Nadu
Advertisement

Sterlite plant ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது, இன்று முதல் விநியோகம்...

கொரோனாவின் தாக்கத்தால், ஆக்சிஜன் தேவை திடீரென்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பலர் உயிரிழந்த சம்பவங்களும் வெளிவந்தன.

Sterlite plant ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது, இன்று முதல் விநியோகம்...

கொரோனாவின் தாக்கத்தால், ஆக்சிஜன் தேவை திடீரென்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பலர் உயிரிழந்த சம்பவங்களும் வெளிவந்தன.

இதையடுத்து, நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது, சர்வதேச நாடுகளும் இந்தியாவுக்கு ஆக்சிஜன், மருந்துகள் உள்ளிட்ட கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றன. 

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிகமாக இயங்கவும், ஆக்சிஜன் உற்பத்தி செய்யவும் உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.

Also Read | புதுச்சேரி: 3 பாஜக நியமன MLA பதவி ஏற்புக்கு சீமான் கண்டனம்

அதையடுத்து அனைத்து முன்னேற்பாடுகளும் முடிந்த நிலையில் நேற்று இரவு முதல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தித் தொடங்கியது. இன்று முதல் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் தொடங்குகிறது.

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வந்த நிலையில், தாங்களாக முன்வந்த ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஆக்சிஜன் உற்பத்தி செய்து கொடுப்பதாக கூறியது.

இதையடுத்து தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தற்காலிக அனுமதி கொடுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.

Also Read | முதலமைச்சர் நிவாரண நிதிக்கு Rs 1 கோடி கொடுத்த நடிகர் சிவக்குமாரின் குடும்பம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு தேவையான மின்சாரம், குடிநீர், உள்ளிட்ட இதர வசதிகளை தமிழக அரசு செய்து கொடுத்தது. 320 பணியாளர்களை கொண்டு ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது.  

இன்று முதல் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் நடைபெறும் என்று ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலை முன்பாக ஆக்சிஜனை ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நேற்று முதல் தொடங்கிய ஆக்சிஜன் உற்பத்தியானது இன்னும் இரு தினங்களில் 40 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.  

Also Read | சென்னையில் இன்று பெட்ரோல் விலை என்ன?

முன்னதாக, மருத்துவ பயன்பாட்டிற்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய மட்டுமே ஆலையை இயக்க வேண்டும். வேறெந்த நோக்கத்துக்கும் ஆலையை இயக்கக்கூடாது என்று வேதாந்தா நிறுவனத்திற்கு கொடுக்கபப்ட்ட அனுமதி கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. மேலும், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வழங்கிய உத்தரவை ஆலையை இயக்க முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1000 டன்னுக்கும் மேலாக மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், பாதுகாப்பான முறையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதில் முழு கவனம் செலுத்த உள்ளதாகவும், ஸ்டெர்லைட் ஆலையில் தனியாக ஆக்சிஜன் பிரிவு அமைந்துள்ளதாகவும் தெரிவித்திருத்திருந்தது.

Also Read | கொரோனா பாதிப்பு: சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More