Home> Tamil Nadu
Advertisement

முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.கஸ்டாலினுக்கு, இலங்கை MP விக்னேஸ்வரன் வாழ்த்து

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில், திமுக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். 

முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.கஸ்டாலினுக்கு, இலங்கை MP விக்னேஸ்வரன் வாழ்த்து

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்ட்பேரவை தேர்தலில், திமுக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) நாளை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். நாளை, மே மாதம்  7 ஆம் தேதி, காலை 9 மணிக்கு, கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. 

இந்நிலையில், முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு, இலங்கை (Srilanka) யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் MP அவர்கள் மு.கஸ்டாலுனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கும் இலங்கை தமிழருக்குமான உறவு தொப்புள் கொடி உறவு என்றும், தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு, இலங்கை தமிழர்கள் சார்ப்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்

முன்னதாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலினை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். 

இதை தொடர்ந்து 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆட்சியமைக்க மு.க.ஸ்டாலின் உரிமை கோரிய நிலையில் கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு கடிதத்தை அவரது செயலாளர் அனந்தராவ் பட்டேல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். 

ALSO READ | தமிழக முதலமைச்சராக நாளை மறுநாள் மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Read More