Home> Tamil Nadu
Advertisement

ICU-வில் SPB: சங்கீத சிகரம் சீக்கிரம் குணமடைய பிரார்த்திக்கும் ரசிகர்கள்!!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரம்ணியம் அவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடல் நிலை நேற்று இரவு திடீரென மோசமானது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ICU-வில் SPB: சங்கீத சிகரம் சீக்கிரம் குணமடைய பிரார்த்திக்கும் ரசிகர்கள்!!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரம்ணியம் (SP Balasubramaniam) அவர்கள் கொரோனா தொற்றுக்கு (Corona Virus) ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடல் நிலை நேற்று இரவு திடீரென மோசமானது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு (ICU) மாற்றப்பட்டார். மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

முன்னதாக, ஆகஸ்ட் முதல் வாரத்தில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அவர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைக் கேள்விப்பட்ட அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டும், விரைவில் குணமடைய வாழ்த்துகளை அனுப்பிய வண்ணமும் உள்ளனர்.

 

ALSO READ: பாடும் நிலா பாலுவையும் பதம் பார்க்கும் கொரோனா தொற்று...

இதையொட்டி இந்த செய்தியைக் கேள்விப்பட்ட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவர்கள் பூரண நலமடைந்து வீடு திரும்ப வேண்டுமென வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.பி.பி, தனக்கு லேசான காய்ச்சல், சளி தொந்தரவு இருந்ததால் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில் தனக்கு மிகவும் குறைவான அளவிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் அறிவுரையின் படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டிருக்கலாம், ஆனால் வீட்டில் இருப்பவர்கள் கவலை அடைவார்கள். அதனால் தான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நான் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். என்னைப் பற்றி எண்ணிரும் அஞ்ச வேண்டாம் என்று கூறியிருந்தார்.  

ALSO READ: கொரோனாவை வெற்றிக் கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

Read More