Home> Tamil Nadu
Advertisement

மே 16 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

மே 16 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... குமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு சுமார் 50 கி.மீ., வேகத்தில் வீசலாம். எனவே, இந்த பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களில், அதிகபட்சமாக, 40 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். எனவே, இன்றும், நாளையும் பிற்பகல், 3:30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்கவும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

பிற பகுதிகளில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், திருப்பூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், இன்றும், நாளையும், இடியுடன் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும்" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், நேற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், செங்கோட்டை, குளச்சல், சித்தாறு, சிவலோகம் ஆகிய இடங்களில் 1 Cm மழை பதிவாகியுள்ளது.

Read More