Home> Tamil Nadu
Advertisement

தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை

தாம்பரம் ரெயில் நிலைய வாசலில் கல்லூரி மாணவி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை

சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் மாநகர அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் சுவேதா (25) ஆவார். இவர் தாம்பரம் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக படித்து வருகிறார்.

இந்த நிலையில் சுவேதா படித்துவரும் கல்லூரி அருகே அவரும் அவரின் ஆன் நண்பன் ராமச்சந்திரன் என்பவரும் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராமச்சந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவின் கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டு அவரும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.

ALSO READ | திண்டுக்கல்லில் பயங்கரம்! பெண் தலையை வீட்டு வாசலில் வீசிய கொலையாளிகள்

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதே மருத்துவமனையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரும் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காதல் விவகாரமா இல்லை வேறு ஏதேனும் காரணமா என சேலையூர் சரக உதவி ஆணையாளர் முருகேசன் தலைமையில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் சுவாதி என்ற மென்பொருள் பொறியாளர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது இதே போன்றதொரு சம்பவம் சென்னையில் மீண்டும் நிகழ்ந்துள்ளது.

ALSO READ | Domestic violence:பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை கொன்ற மகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More