Home> Tamil Nadu
Advertisement

சிவாஜி மணிமண்டபம் இன்று சென்னையில் திறப்பு!!

சிவாஜி மணிமண்டபம் இன்று சென்னையில் திறப்பு!!

நடிகர் சிவாஜி கணேசன் நினைவாக, சென்னையில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைக்கிறார். தமிழக அரசு சார்பில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

சிவாஜியின் பிறந்த நாளான இன்று, இந்த மணிமண்டபம் திறக்கப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று இதனைத் திறந்து வைக்கிறார்.

சிவாஜி கணேசன் நினைவை போற்றும் வகையில் அரிய பல புகைப்படங்கள் இந்த மணிமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன. சிவாஜி குடும்பத்தினர், திரையுலகினர் உட்பட பலர் இவ்விழாவில் பங்கேற்கின்றனர். 

காலை 10.30 மணியளவில் நடைபெறும் இவ்விழாவில் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

Read More