Home> Tamil Nadu
Advertisement

வேலூர் ஆவின் ஊழியர் வீட்டில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல்

வேலூர் செய்திகள்: மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ரஜினி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் மகேந்திரமாலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 

வேலூர் ஆவின் ஊழியர் வீட்டில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல்

வேலூர்: ஆவின் ஒப்பந்த ஊழியரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கி கையும்களவுமாக லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் சிக்கிய வேலூர் ஆவின் உதவி பொது மேலாளர். வீட்டில் இருந்து ஒரு கை துப்பாக்கி மற்றும் 8 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் வேலூர் ஆவின் நிருவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அனுப்பி வைப்பவர். ஆவினில் இவர் ஒப்பந்த அடிப்படையில் அனுப்பிய ஆட்களுக்கான ஊதிய நிலுவை தொகை இருந்துள்ளது. நிலுவை தொகை 5 லட்சத்தி 23 ஆயிரத்தை வழங்க கோரி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் நிறுவனத்தின் உதவி பொது மேலாளராக பணியாற்றி வரும் மகேந்திரமால் ( வயது 57) என்பவரிடம் பலமுறை கேட்டு வந்துள்ளார் ஜெயசந்திரன். 

பல நாட்களாக தாமதப்படுத்திய நிலையில், 5 லட்சத்தி 23 ஆயிரத்துக்கான நிலுவை தொகை காசோலையை வழங்க உதவி பொது மேலாளர் மகேந்திரமால் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. 

ALSO READ | மருத்துவமனையில் இருந்து 8 மாத கர்ப்பிணி மாயம் கடத்தப்பட்டாரா? தீவிர விசாரணை!

இதனையடுத்து ஜெயச்சந்திரன் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஜெயச்சந்திரனிடம் கொடுத்தனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரன்  ஆவின் உதவி பொது மேலாளர் மகேந்திரமாலிடம் காசோலையை அனுமதிக்க ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ரஜினி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் மகேந்திரமாலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 

அவரிடமிருந்து லஞ்சமாக பெற்ற 5 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர். மேலும் மகேந்திரமால் வசித்து வரும் வேலூர் ஆட்சியர் அலுவலகம் பின்புரம் உள்ள தென்றல் நகரில் அமைந்துள்ள அவரது வீட்டை சோதனை செய்த போது உரிமம் இல்லாத பழைய நாட்டு கைதுப்பாக்கி மற்றும் 6 பெரிய தோட்டாக்கல், 2 சிறிய தோட்டாக்கலையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மகேந்திரமாலிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ |  'டிக்டாக்' சுகந்தி கைது! பல பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More