Home> Tamil Nadu
Advertisement

தேர்வில் தோல்வி: பள்ளி மாணவி தற்கொலை, புதுக்கோட்டையில் பரிதாபம்

Pudukkottai: பத்தாம் வகுப்பு மாணவி தேர்வில் தோல்வியுற்று தூக்கிட்ட சம்பவம் அப்பகுதி  மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வில் தோல்வி: பள்ளி மாணவி தற்கொலை, புதுக்கோட்டையில் பரிதாபம்

படிப்பு, அழுத்தம், ஏழ்மை ஆகிய பல காரணங்களால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது இந்நாட்களில் அதிகரித்து வருகிறது. இது ஒரு சமூகமாக நாம் கவலைக்கொள்ள வெண்டிய, கூர்ந்து கவனிக்க வேண்டிய, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தினம் தினம் தொடந்து தற்கொலை பற்றிய செய்திகள் வருவது மனதை பதபதைக்க வைக்கிறது. உலகில் காலூன்றி வாழ்ந்து, வென்று கட்ட வேண்டிய சிறுவர் சிறுமிகளும், இளைஞர்களும் தோல்வியை தழுவிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிக்கிறது. கந்தர்வக்கோட்டையில் மற்றொரு தற்கொலை பற்றிய செய்தி வந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அன்டனூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். சேகைன் மனைவி ரேணுகா. இவர்களது மகள் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மீனாவின் தந்தை சேகர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதன் பிறகு ரேனுகா தீத்தான் விடுதியில் உள்ள தனது சகோதரி வீட்டில் மீனாவை ஒப்படைத்தார். 

அங்கிருந்து கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மீனா பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மீனா அதில் தோல்வியுற்றார். ஆகையால் மீண்டும் துணைத் தேர்வு எழுதினார். ஆனால், துனைத் தேர்விலும், சமூக அறிவியல் பாடத்தில் மீண்டும் மீனா தோல்வியுற்றார்.

மேலும் படிக்க | நாமக்கல் மாவட்டம் வெப்படையில் தனியார் நிதி நிறுவன உரிமையாளர் கடத்திக்கொலை 

இதனால் மன வேதனை அடைந்த மீனா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் செல்லும் வழியிலே மீனா பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த கறம்பக்குடி காவல் துறையினர் மீனாவின் பிரேத உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக கறம்பக்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்தாம் வகுப்பு மாணவி தேர்வில் தோல்வியுற்று தூக்கிட்ட சம்பவம் அப்பகுதி  மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வெண்டுமே தவிர, நம்மை தோர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!!

உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். மாநில உதவிமையம்: 104

மேலும் படிக்க | கட்டைக் காலுடன் வாகன திருட்டில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Read More