Home> Tamil Nadu
Advertisement

மாணவர் சேர்க்கை Day 1: தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை அதிகம் நாடும் பெற்றோர்!!

மொத்த லாக்டௌன் காரணமாக பெற்றோர்களுக்கு ஊதிய குறைப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் பலரால் இம்முறை அதிக தொகை வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க முடியாது.

மாணவர் சேர்க்கை Day 1: தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை அதிகம் நாடும் பெற்றோர்!!

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை செயல்முறை ஜூன் முதல் தொடங்குகிறது. எனினும், இவ்வாண்டு COVID-19 தொற்றுநோய் மற்றும் அதனால் விதிக்கப்பட்ட லாக்டௌன் காரணமாக அது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

திருத்தப்பட்ட அட்டவணையின்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் (Private Schools) உட்பட அனைத்து பள்ளிகளிலும் 1, 6 மற்றும் 9 வகுப்புகளுக்கான சேர்க்கை திங்கள்கிழமை முதல் தொடங்கியது. ஆனால் 11 ஆம் வகுப்புக்கான சேர்க்கை ஆகஸ்ட் 24 முதல் தொடங்கும்.

இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் (Government Schools) சேர்க்கை சுமார் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த லாக்டௌன் காரணமாக பெற்றோர்களுக்கு ஊதிய குறைப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் பலரால் இம்முறை அதிக தொகை வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க முடியாது. ஆகையால் இந்த ஆண்டு பல பெற்றோர்கள் அரசு பள்ளிகளை அணுகுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன் கூறுகையில், “பல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருக்கும் இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. குறிப்பாக 9 ஆம் வகுப்புக்கு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. நகரத்தின் பல அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சாதகமான குறிப்பில் தொடங்கியுள்ளது” என்றார்.

ராமநாதபுரத்தில் உள்ள எர்வாடி தாலுகாவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் மூத்த ஆசிரியர் ஜே.செந்தில்நாதன், தனது பள்ளி 6 மற்றும் 9 வகுப்புகளில் 20 மாணவர்களை அனுமதித்ததாக கூறினார். லாக்டௌன் காலத்தில் பள்ளி ஏற்கனவே 50 மாணவர்களை ஆன்லைனில் அனுமதித்துள்ளது.

ALSO READ:TN அரசு பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்..!

அரசு பள்ளிகளில் அதிக அளவிலான மாணவர்கள் சேர்வது ஒரு சாதகமான நிலையாகும். இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி நிலவி அங்கு கல்வித் திறனும் அதிகரிக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் செயலாளர் டி.சி. இளங்கோவன் கூறுகையில், அவர்கள் மாநிலம் முழுவதும் இருந்து சேகரித்த தகவல்களின்படி, தனியார் பள்ளிகளில் சேர்க்கை முதல் நாளில் சரியாக இல்லை என்றார். இதற்கு முக்கிய காரணம் பெற்றோரின் ஊதியக் குறைப்பாகும் என்றார் அவர். இந்த ஆண்டு சேர்க்கை மிகக் குறைவாக இருக்கும் என்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது. 

ALSO READ: TN Class 12 results: நாளை முதல் விடைத்தாள் நகலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம்

Read More