Home> Tamil Nadu
Advertisement

சத்தியமங்கலம்: ஹோட்டல் ரூமில் உல்லாசம்.. வசமாக சிக்கிய கள்ளக்காதல் ஜோடி.!

சத்தியமங்கலத்தில் கள்ளக்காதல் ஜோடி ஹோட்டல் ரூமில் தனியாக இருக்கும்போது, உறவினர்கள் வந்து சுற்றி வளைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஹோட்டல் மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  

சத்தியமங்கலம்: ஹோட்டல் ரூமில் உல்லாசம்.. வசமாக சிக்கிய கள்ளக்காதல் ஜோடி.!

ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் கரட்டுர் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் பிரபாகர் (வயது 29). இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வனிதா (வயது 31). இவரும் திருமணம் ஆனவர். இவர்கள் இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இது வனிதாவின் உறவினர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. 

மேலும் படிக்க | நான் பாஜகவுக்கு செல்கிறேனா? சொன்னவனை செருப்பால் அடிப்பேன்- திருநாவுக்கரசர் எம்பி ஆவேசம்

இந்த நிலையில் பிரபாகர் மற்றும் வனிதா இருவரும் சத்தியமங்கலம் பஸ் நிலையம் எதிரில் உள்ள  தனியார் லாட்ஜில் அறை எடுத்து தனிமையில் சந்தித்துள்ளனர். இந்த தகவல் வனிதாவின் உறவினர்களுக்கு தெரியவர அவர்கள் உடனே அவர்கள் தனிமையில் இருந்த லாட்ஜூக்கு சென்றுவிட்டனர். பிரபாகர் மற்றும் வனிதா தங்கியிருக்கும் லாட்ஜ் ரூமின் கதவை தட்டி, உள்ளே இருந்து வெளியே வருமாறு சத்தம்போட்டுள்ளனர். இதனை அறிந்த திருமணத்தை மீறிய காதல் ஜோடிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உடனே, ரூமுக்கு வெளியே இருப்பவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, லாட்ஜ் ரூமின் பின்புற கதவை திறந்து அதன் வழியாக தப்ப முயற்சி செய்துள்ளனர். 

அதாவது, இவர்கள் தங்கியிருந்த இரண்டாவது மாடியில் இருந்து அருகில் இருந்த தனியார் மாடிக்கு எட்டிக் குதித்துள்ளனர். இதில் ராகுல் பிரபாகருக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. வனிதாவிற்கு இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதல் ஜோடி உறவினர்களிடமிருந்து தப்பிப்பதற்காக மாடியில் இருந்து குதித்து தப்பியோட முயன்ற சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்? சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More