Home> Tamil Nadu
Advertisement

சாத்தான்குளம் வழக்கு: ஜெயராஜின் மகள் பெர்சிக்கு அரசு வேலை!!

கடந்த சில காலங்களில் தமிழகத்தை உலுக்கிய சம்பவங்களில் சாத்தான்குளம் சம்பவம் மிக முக்கியமான ஒன்றாகும். சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகன் - ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ், போலீஸ் காவலில் இறந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

சாத்தான்குளம் வழக்கு: ஜெயராஜின் மகள் பெர்சிக்கு அரசு வேலை!!

கடந்த சில காலங்களில் தமிழகத்தை உலுக்கிய சம்பவங்களில் சாத்தான்குளம் (Sathankulam) சம்பவம் மிக முக்கியமான ஒன்றாகும். சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகன் - ஜெயராஜ் (Jeyaraj) மற்றும் பென்னிக்ஸ் (Fenix), போலீஸ் காவலில் இறந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இது குறித்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், ஜெயராஜின் மகள் பெர்சிக்கு வருவாய் துறையில் வேலை வழங்கப்பட்டுள்ளது.  

பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோர் செல்போன் கடை வைத்திருந்தனர். லாக்டௌனில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகும் கடையை மூடாமல் இருந்ததால், லாக்டௌன் விதிமுறைகளை மீறியதாக ஜூன் 19 அன்று அவர்கள் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றம் அவர்களை நீதிமன்றக் காவலில் வைத்ததையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டதால் காவல் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படட் தந்தையும் மகனும் முறையே ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இறந்தனர். இந்த மரணங்கள் நாடு தழுவிய கோபத்தை உருவாக்கியது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களிடமிருந்து விசாரணை கோரப்பட்டது.

இதைத் தொடர்ந்து, முன்னதாக விசாரணையை கையாண்ட CBCID, 10 போலீஸ்காரர்கள் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.  உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை கான்ஸ்டபிள் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 பேரை கைது செய்தது. பின்னர் தமிழக அரசு விசாரணையை மத்திய புலனாய்வு நிறுவனமான CBI-க்கு மாற்றியது. CBI, போலீஸ் காவலில் மரணம் என்றிருந்த FIR-ஐ மரண வழக்காக மாற்றியது.

ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இரக்க அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்பு அறிவித்திருந்தார். அதன்படி, ஜெயராஜின் மூத்த மகள் மற்றும் பென்னிக்சின் சகோதரியான பெர்சிக்கு வருவாய் துறையில் இளைய உதவியாளராக வேலை வழங்கப்பட்டது. நியமன ஆணையை பெர்சிக்கு பழனிசாமி இன்று செயலகத்தில் வழங்கினார்.

ALSO READ: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிப்பு

பெர்சி (Percy), நியமன உத்தரவைப் பெற்ற பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்து, தனக்கு வேலை ஒன்றை அளித்து, அதன் மூலம், தான் தன் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவிய முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். கொலை வழக்கு விசாரணையை விரைவுபடுத்துமாறு அவர் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டார்.

ALSO READ: சாத்தான்குளம் கொடூரம்: இதுவரை 4 காவல்துறை அதிகாரிகள் கைது; தொடரும் CBCID விசாரணை

Read More