Home> Tamil Nadu
Advertisement

2 கோடி லஞ்ச வழக்கில் சசிகலாவிற்கு முன் ஜாமீன்

லஞ்ச வழக்கு விசாரணைக்காக சசிகலா, இளவரசி உள்பட 7 பேரும் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகினர். சசிகலா தரப்பில் முன்ஜாமீன் கோரப்பட்டது அதற்கு நீதிபதி முன் ஜாமீன் வழங்கினார்

2 கோடி லஞ்ச வழக்கில் சசிகலாவிற்கு முன் ஜாமீன்

பெங்களூரு: சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். தற்போது 3 பேரும் விடுதலையாகி விட்டனர். இதற்கிடையில், சிறைவாசம் அனுபவித்த போது சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சிறை அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக இருந்த கிருஷ்ணகுமார், டாக்டர் அனிதா, அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர் ஆகிய 4 பேர் மீதும் விசாரணை நடத்த கர்நாடக அரசு அனுமதி வழங்கி இருந்தது. அதைத்தொடர்ந்து, இந்த லஞ்ச வழக்கில் ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணையை முடித்து கடந்த ஜனவரி மாதம் 7-ந் தேதி பெங்களூரு 24-வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்கள்.

அந்த குற்றப்பத்திரிகையில் சிறை அதிகாரிகளான சோமசேகர், டாக்டர் அனிதா, சுரேஷ், கஜராஜ் மாகனூர், சசிகலா, இளரவரசி உள்பட 7 பேர் சேர்க்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து, பெங்களூரு 24-வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி லட்சுமி நாராயண் பட் முன்னிலையில், ரூ.2 கோடி லஞ்ச வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க: EPS-ஐ நம்பி கெட்டவர்கள் பலர்.. கட்சியை சின்னம்மாவிடம் ஒப்படையுங்கள் -தேனி கர்ணன்

அதன்படி, கடந்த மாதம் (பிப்ரவரி) 11-ந் தேதி இந்த லஞ்ச வழக்கு தொடா்பான விசாரணை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள சிறை அதிகாரிகள், சசிகலா, இளவரசி உள்பட 7 பேரும் அடுத்த விசாரணைக்கு ஆஜராக வேண்டும், இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பும் படியும் நீதிபதி லட்சுமி நாராயண்பட் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மேலும் இந்த வழக்கு விசாரணையை மார்ச் 11-ந் தேதிக்கு (அதாவது இன்று) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், ரூ.2 கோடி லஞ்ச வழக்கு தொடர்பான விசாரணை பெங்களூரு 24-வது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி லட்சுமி நாராயண்பட் முன்னிலையில் இன்று  காலை 11 மணியளவில் நடைபெற்றது.

விசாரணைக்காக சசிகலா, இளவரசி உள்பட 7 பேரும் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகினர். சசிகலா தரப்பில் முன்ஜாமீன் கோரப்பட்டது அதற்கு நீதிபதி முன் ஜாமீன் வழங்கினார்

மேலும் படிக்க: சசிகலா அவர்களே வருக.. ஓபிஸ்-ஈபிஸ் அவர்களே வெளியேறுக -ஒன்றுகூடும் அதிமுக நிர்வாகிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More