Home> Tamil Nadu
Advertisement

சொத்து குவிப்பு வழக்கு: சென்னையில் பலத்த பாதுகாப்பு

சொத்து குவிப்பு வழக்கு: சென்னையில் பலத்த பாதுகாப்பு

சசிகலா சொத்து குவிப்பு வழக்கு எதிரொலி சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 ஆயிரம் மேற்பட்ட போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஒருவேளை சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால் சென்னையின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஈசிஆரில் உள்ள கூவத்தூரில்தான் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அந்த ரிசார்ட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மன்னார்குடி கும்பல் குவிக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்த ரவுடிக் கும்பல் வன்முறையில் ஈடுபடலாம் என தெரிகிறது.

இதனால் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடு மற்றும் அவருக்கு ஆதரவு அளித்து வரும் அமைச்சர்களின், வீடுகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போயஸ் கார்டன் முழுவதும் பலத்த பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கார் உள்ளிட்ட வாகனங்களை போலீஸார் தீவிரமாக சோதனையிட்டு பிறகு அனுப்புகின்றனர்.

Read More