Home> Tamil Nadu
Advertisement

நடிகை சரிதா நாயருக்கு மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை: நீதிமன்றம்

கேரளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் குற்றவாளி என்றும் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவதாக கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நடிகை சரிதா நாயருக்கு மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை: நீதிமன்றம்

கோவை: காற்றாலை மோசடி வழக்கில் கேரள மாநிலத்தை சேர்ந்த நடிகை சரிதா நாயர் குற்றவாளி என்றும், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாகவும் கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த வழக்கின் வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காற்றாலை மோசடி வழக்கு கேரளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

கேரளாவில் காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி 2011 முதல் 2016 வரை முதல்வராக ஆட்சியில் இருந்தார். கேரளா மாநிலத்தில் சோலார் பேனல் தகடு அமைத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்த சரிதா நாயரின் நிறுவனம் பணமோசடி செய்ததாக சரிதா நாயா் கடந்த 2013 ஆம் ஆண்டு கைது செய்யபட்டார். 

அதன்பின்னர் ஜாமீனில் வெளிவந்த தொழிலதிபர் சரிதா நாயர், உம்மன் சாண்டி மற்றும் ஆலப்புழா தொகுதி எம்.பி., கே.சி.வேணுகோபால் ஆகியோர் மீது பாலியல் புகார் தெரிவித்தார். ஆனால் குற்றச்சாட்டுக்கு உள்ளான இருவரும் தங்கள் மீதான புகாரை மறுத்தனர். அப்பொழுது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சபரிமலை விவகாரத்தை திசை திருப்பவே  பாலியல் புகா செய்யப்பட்டுள்ளதாக கேரள காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

கேரளாவில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது வீடுகள், அரசு அலுவலகங்களுக்கு சூரிய மின் சக்தி தகடுகளை அமைத்து தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டதாக சரிதா நாயர் மற்றும் அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடரப்பட்டது. இத வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. 

Read More