Home> Tamil Nadu
Advertisement

அமைச்சரின் பி.ஏ. எனக்கூறி மோசடி..ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைது

பெரம்பலூர் அருகே அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் எனக்கூறி தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினரை இலவசமாக சிகிச்சை பெற வைத்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அமைச்சரின் பி.ஏ. எனக்கூறி மோசடி..ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைது

பெரம்பலூர் அருகேயுள்ள  சிறுவாச்சூர் கிராமத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மண்ணச்சநல்லுார் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளது. கடந்த 23-ம் தேதி இந்த மருத்துவமனை தலைவர் மரகதமணியை போனில் தொடர்பு கொண்ட ஒருவர், தலைமை செயலகத்தில் இருந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் பேசுவதாக தெரிவித்து உள்ளார். மேலும் மன்னார்குடியில் இருந்து அந்த மருத்துவமனைக்கு வரும் தனது தங்கையின் கணவர் கட்டபொம்மனுக்கு உயரிய சிகிச்சை அளிக்கும்படி அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 30-ம் தேதி கட்டபொம்மன் இதய நோய் சிகிச்சைக்காக அந்த மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார்.

மேலும் படிக்க | இன்ஸ்டாகிராம் நண்பரிடம் ரூ.73 லட்சம் பறிகொடுத்த 67 வயது மூதாட்டி!

fallbacks

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நோயாளியை வேறொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகக் கூறி பன்னீர்செல்வம் 'டிஸ்சார்ஜ்' செய்யக் கோரியுள்ளார். அப்போது பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக கட்டணம் செலுத்துமறு மருத்துவமனை நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர். அமைச்சரின் உதவியாளரான என்னிடமே பணம் கேட்கிறீர்களா? எனக்கூறி பன்னீர் செல்வம் அப்போது மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் அவர் வைத்திருந்த அடையாள அட்டையை நகல் எடுத்து அனுப்பி விட்டனர். பின்னர் இச்சம்பவம் குறித்து மருத்துவமனை மேலாளர் யுவராஜா காவல்துறையில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் மன்னார்குடி தெற்கு செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்பதும்,  அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரிய வந்தது. இவர் அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் எனக்கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, பன்னீர்செல்வத்தை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | மருத்துவமனை கழிப்பறையில் சடலமாக கிடந்த ஆண் சிசு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More