Home> Tamil Nadu
Advertisement

பிரபல யூட்யூபர் cherry vlog சுரேஷ் உட்பட மூவருக்கு ரூ 25000 அபராதம் விதித்த வனத்துறை

Reserve Forest Without Permission: காப்பு காட்டுக்குள் அனுமதி இன்றி நுழைந்த 3 பேருக்கு தலா ரூ.25,000 அபராதம்... பிரபல யூடியூபர் cherry vlog சுரேஷ் உட்பட மூவருக்கு  நீலகிரி மாவட்ட வனத்துறை அபராதம் விதித்தது...

பிரபல யூட்யூபர் cherry vlog சுரேஷ் உட்பட மூவருக்கு ரூ 25000 அபராதம் விதித்த வனத்துறை

உதகை: நீலகிரி மாவட்டம் உதகை அருகே காப்பு காட்டுக்குள் அனுமதி இன்றி நுழைந்த 3 பேருக்கு தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.  அனுமதி இன்றி வனப்பகுதிக்குள் நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் கவுதம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம்  65 வனப்பகுதியை கொண்டுள்ளது. இங்கு காட்டு யானை, புலி, சிறுத்தை , கரடி மற்றும் பல்வேறு அரிய வன விலங்குகள் வசித்து வருகின்றன. தமிழகத்தில் நீர் ஆதாரங்களை உருவாக்கக்கூடிய மிக முக்கிய வனப்பகுதி இங்கு இருப்பதால், மிகவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக கருதப்பட்டு ஹெலிகாப்டர் மற்றும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் வெளி ஆட்கள் அனுமதி இன்றி உள்ளே நுழையக்கூடாது.

இந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி உதகை அடுத்த தலைக்குந்தா பகுதியில் உள்ள எர்த் அன்ட் டேம் என்ற காப்புக் காட்டிற்குள் காஞ்சிபுரத்தை சேர்ந்த தாகூர் சுரேஷ் பாபு (வயது 27) என்ற யூடியுபர், உதகையை சேர்ந்த பைசல் ரகுமான் (26), முகமது நவாஸ் (23) ஆகியோர் உதவியுடன் சென்று ட்ரோன் உள்பட சில நவீன கேமராக்கள் மூலம் சாகச வீடியோ எடுத்து உள்ளார். 

மேலும் படிக்க | இந்தியாவின் பணக்கார மாநிலங்களின் பட்டியல்! தமிழ்நாட்டிற்கு எந்த இடம் தெரியுமா?

இதன் பின்னர் இந்த வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளார். பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் எடுக்கப்பட்ட வீடியோவை யூடியூபில் பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர்.

இதன் பேரில் யூடியூபர் தாகூர் சுரேஷ் பாபு உள்பட 3 பேரையும் உதகையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அனுமதி இன்றி சென்றது உறுதியானது. மேலும் அவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தாகூர் சுரேஷ்பாபு உட்பட 3 பேருக்கும் தலா ரூ.25,000 வீதம் ரூ.75,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

இது குறித்து மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், உள்ளூர் மக்கள் உதவியுடன் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வெளிநபர்கள் அனுமதி இன்றி சென்று வருகின்றனர் இவ்வாறு அனுமதி இன்றி சென்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மன அலுவலர்கள் உதவி இல்லாமல் வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது என்றார்.

மேலும் படிக்க | இந்துகளுக்கு எதிரான கட்சியே பாஜக தான்... ஏன் தெரியுமா? - கனிமொழி சொல்லும் பாயிண்ட்

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளை அதிகரிக்கவும், ஏற்கனவே இருக்கும் வனப்பரப்பை தொடர்ந்து பாதுகாக்கவும் அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக, 1991ம் ஆண்டில் தனியார் காப்புக்காடுகள் பாதுகாப்பு சட்டம் (Private Reserve Forests Conservation Act) அமல்படுத்தப்பட்டது.

சட்டப்படி, தனியார் காப்புக்காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலங்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் மட்டுமல்ல, அந்தப் பகுதிகளிலுள்ள மரங்களை வெட்டுவதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ள கமிட்டியிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தொப்பை அதிக தொந்தரவு செய்கிறதா? இரவு தூங்கும் முன் இவற்றை குடியுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More