Home> Tamil Nadu
Advertisement

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் உத்தரவு..!

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு..!

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் உத்தரவு..!

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு..!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் தற்போது பதவியில் இருக்கும் விஷால் தலைமையிலான 'பாண்டவர் அணி' மற்றும் நடிகர் பாக்யராஜ் தலைமையிலான 'சுவாமி சங்கரதாஸ் அணி' எதிரும் புதிருமாக உள்ளன. பாக்யராஜ் அணியினர், விஷால் அணியினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். 

இதற்கிடையே, உறுப்பினர் பதவியில் இருந்து தங்களை முறைகேடாக நீக்கியதாக பாரதிபிரியன் உள்ளிட்ட 61 பேர் சங்க பதிவாளரிடம் புகார் தெரிவித்திருந்தனர். சங்கத்தில் உள்ள 44 தொழில் முறை உறுப்பினர்கள், தொழில் முறை அல்லாத உறுப்பினர்களாகவும், 13 உறுப்பினர்கள் தொழில் முறை உறுப்பினர்களாக தொடர்ந்து நீடித்து வருகின்றனர். மேலும், 4 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இவையனைத்தும் முறைகேடாக நடந்துள்ளது என்று சம்மந்தப்பட்டவர்கள் பதிவாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர். 

இந்த சூழ்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை உடனடியாக நிறுத்த தென் சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சர்ச்சைகள் குறித்து புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தவேண்டியுள்ளது; சர்ச்சைகள் அனைத்தும் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு தேர்தலை நடத்தலாம் என்று அவர் கூறியுள்ளார். 

கடந்த அக்டோபர் மாதம், நடிகர் சங்க உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், நடிகர் சங்க கட்டிட வேலைகள் நடந்துகொண்டிருபட்டதால் பொதுக்குழு கூடி தேர்தலை அடுத்த மாதம் 14 ஆம் தேதி நடத்தலாம் என ஒத்திவைத்தது.  சங்க தலைவராக இயக்குநர் பாரதிராஜா ஒருமனதாக தேர்வான நிலையில் தேர்தல் நடைபெற உள்ளது.

 

Read More