Home> Tamil Nadu
Advertisement

எங்களையும் விடுதலை செய்யுங்கள்...முதலமைச்சருக்கு ரவிச்சந்திரன் கடிதம்

பேரறிவாளனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இவ்வழக்கில் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.   

எங்களையும் விடுதலை செய்யுங்கள்...முதலமைச்சருக்கு ரவிச்சந்திரன் கடிதம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 32 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது பரோலில் விடுதலையாகி தூத்துக்குடி மாவட்டம் சூரப்பநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் அண்மையில் சிறையில் இருந்து விடுதலையான நிலையில், இவ்வழக்கில் தண்டனை பெற்ற தான் உட்பட 6 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தான் உட்பட 6 பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை ஆளுநரிடம் அனுப்பாமல், தமிழக அரசுக்குரிய நிர்வாக ஆணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க | பழ.நெடுமாறனை நேரில் சந்தித்த பேரறிவாளன் - என்ன பேசினார் ?

fallbacks

32 ஆண்டுகளாக சிறையில் இருந்த நிலையில், தங்களின் உத்தரவின் பேரில் சிறை விடுப்பில் இருந்து வருவதாகவும், இதனால் உடல் நலம் குன்றிய தனது வயதான தாயாரை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள முடிவதாகவும், தனது உள்ளார்ந்த அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது போல், தான் உட்பட 6 பேரையும் முதலமைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் எனவும் ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் படிக்க | பேரறிவாளன் விடுதலை பாஜகவின் மிகப் பெரிய சதி - மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More